ஓ.எம்.ஜாபீர், எம்.எல்.அப்துல் காதர், றிஸ்வான் சலாஹுதீன். உடத்தலவின்ன: House of Chemistry Publications, 11/A, கலதெனிய, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (மாத்தளை: ஸல்காலிங்க் அச்சகம், இல. 10, பிரதான வீதி).
iv, 152 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14.5 சமீ.
சகல அரசாங்க சேவை உத்தியோகத்தர்களுக்குமான வினைத்திறன் காண் தடை வழிகாட்டி (Efficiency Bar Examinations) நூல். அபிவிருத்தி உத்தியோகத்தர், முகாமைத்துவ உதவியாளர், சமுர்த்தி உத்தியோகத்தர், இலங்கை நிர்வாக சேவை மற்றும் ஏனைய சேவைகளுக்கான வழிகாட்டி. அரசாங்க உத்தியோகத்தர்கள் வினைத்திறமை காண் தடை பரீட்சையில் சித்தியெய்துவது அவர்களின் சேவையை உறுதிப்படுத்துவதிலும், உரிய நேரத்தில் ஆண்டு வேதன ஏற்றத்தை பெற்றுக்கொள்வதிலும் உரிய பதவி உயர்வுகளை பெற்றுக் கொள்வதிலும் இன்றியமையாத தேவையாக விளங்குகின்றது. எனினும் அரச உத்தியோகத்தர்களின் EB-Efficiency Bar பரீட்சைக்கான இலகு வழிகாட்டி நூலொன்று தமிழ்மொழி மூலத்தில் கிடைக்கப்பெறாத பெரும் குறையை இந்நூலின் வருகை நிவர்த்திசெய்துள்ளது. இதில் அலுவலக முகாமை, நிதி ஒழுங்கு விதிகள், அரச கொள்வனவு நடைமுறைகள், தாபன விதிக்கோவை ஏற்பாடுகள், அரசாங்க சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிக்கோவை ஒழுங்கு விதிகள், கடந்தகால மற்றும் மாதிரி வினாக்கள் ஆகிய ஆறு பாடப் பரப்புகள்; இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 79070).