ந.வீரமணி ஐயர். திருக்கோணமலை: பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர், சிவயோக சமாஜம், 1வது பதிப்பு, 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).
iv, 21 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
மகாவித்துவான் பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் அவர்கள் கண்டது, கேட்டது, உணர்ந்தது அனைத்தையும் உள்ளத்தில் திரட்டிப் பிழிந்தெடுத்து ‘அமிர்தவர்ஷனிக் கீர்த்தனைகளாக’ இந்நூலை உருவாக்கியுள்ளார். அமிர்தவர்ஷத்தை அருளியவர் பிரம்மஞானி ஸ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தா அவர்களாவார். இவர் கேரளத்தில் பிறந்து ஈழத்தில் கடல்சூழ் கோணமாமலையில் சங்கமமாகியவர். அவர் இயற்றியிருந்த அமிர்தவர்ஷத்தை திரட்டித் தொகுத்தவர் அவரடியாராகிய அருட்செல்வி தா.சியாமளாதேவி அவர்கள். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 114788).