17406 பாவேந்தல் பாடல்கள்: இன்னிசைப் பாடல் தொகுப்பு.

பாலமுனை பாறூக். பாலமுனை-3: பர்ஹாத் பதிப்பகம், 14, பர்ஹானா மன்ஸில், 1வது பதிப்பு, நவம்பர் 2022. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B மின்சார நிலைய வீதி).

xvi, 60 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-99311-6-4.

இதிலுள்ள 54 பாடல்களில் 15 பாடல்கள் இறை நம்பிக்கையையும் முஹம்மது நபி(ஸல்) அவர்களது சிறப்புகளையும், மார்க்கரீதியிலான நடைமுறைகளையும் வெளிப்படுத்துகின்ற இஸ்லாமிய பக்திப் பாடல்களாக அமைகின்றன. ஒரு சில பாடல்கள் முஸ்லிம் புலவர்கள், பெரியார்களைப் பற்றியன. இத்தொகுதியிலுள்ள ஏனைய மெல்லிசைப் பாடல்களின் பாடுபொருள்கள் தனித்துவமானவை. இவை, பெரும்பாலானவர்கள் பாடாப் பொருள்கள் பற்றிப் பாடுகின்றன. ஈழத்தின் சமகால அரசியல், பொருளாதார நெருக்கடிகள் பற்றியவை இவற்றுள் முக்கியமானவை. இதிலுள்ள பாலமுனை பற்றிய பாடல் இவரது பிரதேசப் பற்றினை வெளிக்காட்டுவதாய் அமைகின்றது. இப்பாடல்களில் பேச்சு மொழி, பிரதேச வழக்காறு என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. இலக்கியப் பொன்விழாக் கண்ட இக்கவிஞர் கவிதை இலக்கியத்திற்காக யாழ் மண்ணில் வென்மேரி அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றவர். கலாபூஷணம், கிழக்கு மாகாண வித்தகர் விருது, ‘சுவத’ விருதுகள் உட்பட பல இலக்கிய விருதுகளைப் பெற்றவர். அரச சாஹித்திய, கொடகே சாஹித்திய விருதுகளை தனது காவிய நூல்களுக்காகப் பெற்றவர்.

ஏனைய பதிவுகள்

Best Online slots games 2024 You

Blogs Just what Products Is also Players Used to Enjoy On the web? Free Trial Online casino games Versus Real money Ports You will want