சுபாஷினி பத்மநாதன். கொழும்பு: கலாநிதி சுபாஷினி பத்மநாதன், விமலோதய பாரம்பரிய பரத நாட்டிய கேந்திர நிலையம், தெகிவளை, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி).
(10), 76 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-52652-1-8.
அரங்கவியல் ஆடற்கலையில் ஆடவரதும் ஆடல் நங்கையரினதும் பங்களிப்பு, அரங்கவியல் ஆடற்கலையில் மேடை அலங்காரம், அரங்கவியல் ஆடற்கலையில் தொழல்நுட்பவியலின் பங்களிப்பு, அரங்கவியல் ஆடற்கலையில் அங்கலட்சணப் பங்களிப்பு, அரங்கவியல் ஆடற்கலையை அலங்கரிக்கும் அரும்பும் மொட்டுக்கள், அரங்கவியல் ஆடற்கலையில் முக ஒப்பனை, அரங்கவியல் ஆடற்கலையில் ஆபரணப் பயன்பாடு, அரங்கவியல் ஆடற்கலையில் ஆடை ஆகாரியம், அரங்கவியல் ஆடற்கலையில் அருகியும் மருகியும் வரும் பாவரசப் பாவனைப் பிரயோகம், அரங்கவியல் ஆடற்கலையில் மலர்களின் பங்களிப்பு, அரங்கவியல் ஆடற்கலையினை அலங்கரிக்கும் பலவகை உத்தியியல் உபாயங்கள், அரங்கவியல் ஆடற்கலையில் இடம்பெறும் சில அடிப்படை நுட்பவியல் நுணுக்கங்கள், அரங்கவியல் ஆடற்கலையில் இலங்கையின் கண்டிய நடனம், அரங்கவியல் ஆடற்கலையில் இலங்கையின் சாஸ்திரீக சம்பிரதாய நடனமாகிய சப்ரகமுவ நடனம், அரங்கவியல் ஆடற்கலையில் இலங்கையின் றுகுணு நடனம் ஆகிய 15 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 86113).