17411 ஆனந்தக்கூத்து: நாட்டிய நாடகங்கள்.

புனிதவதி சண்முகலிங்கம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், இணை வெளியீடு, கரவெட்டி: திருமதி புனிதவதி சண்முகலிங்கம், மாணிக்க வளவு, கரணவாய் தெற்கு, 1வது பதிப்பு, மே 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

132 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-03-0.

ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ்த்தின போட்டிகள், அரச நடனப் போட்டிகள், கல்விசார் நிறுவனங்களால் நடாத்தப்படும் விழாக்கள் ஆகியவற்றிற்கான நாட்டிய நாடகங்களை தயாரிக்கும் பொறுப்பாசிரியராக ஆசிரியர் புனிதவதி சேவையாற்றி வந்துள்ளார். பாடசாலைகளுக்கிடையே நடைபெறும் நாட்டிய நாடகங்களுக்கென ஒரு தனி மரபு உண்டு. இந்தக் கட்டுக்கோப்புக்குள் நின்று ஆசிரியர் புனிதவதி எழுதிய இந்த நாட்டிய நாடகங்கள் பிரசித்திபெற்றன. ஆனந்தக்கூத்து, தாரகாவன முனிவர் யாகம், வானத்து மங்கை பெற்ற கானத்து மாமயிலாள், தாடகை வதம், தமயந்தி சுயம்வரம், பாஞ்சாலி சபதம், சீதா அபகரணம், கீதோபதேசம், கண்டனர் தந்தையை காரிருள் நீக்கிடத் தோன்றிய காருண்ய ஒளி ஆகிய பத்து நாட்டிய நாடகங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. திருமதி புனிதவதி சண்முகலிங்கம், அமரர் குப்பிழான் ஐ.சண்மகன்  அவர்களின் துணைவியார். குப்பிழான் ஐ.சண்முகம் அவர்களின் மறைவின் பின்னர் 31ஆம் நாள் நினைவாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

17245 முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம்: ஓர் இஸ்லாமிய நோக்கு.

றவூப் ஸெய்ன். காத்தான்குடி: ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியம், 1வது பதிப்பு,  டிசம்பர் 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை). (6), 130 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ. இலங்கை