17412 அரங்க வலைகள்.

நீ.மரிய சேவியர். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 316 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 1800., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6164-91-1.

திருமறைக் கலாமன்றத்தின் ஸ்தாபகரும் ஈழத்தின் அரங்க ஆளுமைகளில்  ஒருவருமாகிய அருட்கலாநிதி நீ.மரிய சேவியர் அடிகள் எழுதிய மேற்புலத்தில் நிலவிய நவவேட்கைவாத மற்றும் மாற்றரங்குகள் பற்றிய 19 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மாற்று அரங்கும் ஆர்த்தோவும், கொடூர அரங்கால் ஈர்க்கப்பட்ட நவவேட்கைவாதிகள், உலகளாவிய அரங்கப் புதுமொழியைத் தேடிய பீற்றர் ப்றூக்,  பீற்றர் ப்றூக்கின் மகாபாரதம், நடிகனை முதற்பொருளாய்க் கொண்ட ஜெர்ஸிக் க்றொட்டொவ்ஸ்க்கி, க்றொட்டொவ்ஸ்க்கியின் வழித்தோன்றலான யூஜேனியோ பார்பா, இரு நவ அலைகள், ஒரு போர்வையில் பல பார்வைகள், நவவேட்கைவாத நிழலில் நின்று ஜனரஞ்சகமான நாடகங்களை எழுதும் ஆசிரியர் பீற்றர் ஷாவ்வர், அரங்கிலும் ஊடகத் துறையிலும் செயற்படும் இரு நவவேட்கைவாதிகள் ரொம் ஸ்ரொப்பாட், ஸாம் ஷெப்பாட், அபத்த நாடகங்களால் பிரபல்யமடைந்த நவவேட்கைவாதி யூஜின் இயொனெஸ்க்கோ, மாற்று அரங்கும் சாமுவேல் பெக்கற்றும், அடித்தள மக்கள் அரங்கு டாறியோவோ, நான்கு அரங்க ஆளுமைகளுடன் ஒரு கற்பனைக் கலந்துரையாடல், ஆரியான் ம்நூக்சினின் ‘சடுதியாக சில விழிப்பு இரவுகள், முரண்பாட்டரங்கு, ஜோர்ஜ் லியோனின் ‘லடம் சே மக்சிம’, பின் நவீனத்துவமும் அரங்கும், தொகுப்பும்-நிறைவும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகளைத் தொடர்ந்து ஆற்றுகை சஞ்சிகையில் நீ.மரிய சேவியர் எழுதிய ‘நாம் அனைவரும் அரங்க’ என்ற தலைப்பில் ஒளகுஸ்தோ போல் பற்றிய ஆக்கம் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

1Win букмекерская контора 1Вин

Содержимое 1win зеркало рабочее для входа на официальный сайт 1вин 1win Зеркало Один Вин Спортивные ставки и 1 Win Casino Официальный сайт 1win зеркало для