17417 இரசித்த சினிமா.

எம்.கே.முருகானந்தன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

112 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-6601-35-5.

மருத்துவரான எம்.கே.முருகானந்தம் தரமானதொரு திரைப்படச் சுவைஞருமாவார். இந்நூலிலுள்ள அவரரு இரசனைக் குறிப்புகள் அதற்குச் சான்று பகர்கின்றன. தமிழ் சினிமா, இந்திய சினிமா என்பதற்கும் அப்பால் ஆங்கிலம், கொரிய, பிரெஞ்சு, ஸ்பானிய, ஈரானிய சினிமா என்றும், குறும்படங்கள் என்றும் இவரது  திரைப்படம் சார்ந்த ரசனை ஆழமானது. ஒவ்வொரு படத்தையும் அவற்றின் சட்டகங்கள், படத் தொகுப்பு, இசை, குறியீடு எனப் பன்முக நுட்பங்களையும் இக்குறிப்புகளினூடாக அலசி ஆராந்திருக்கிறார். இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 410ஆவது நூலாக வெளிவந்துள்ளது. மதி சுதாவின் ‘வெந்து தணிந்த காடுகள்’, கருணைக் கொலை பற்றிய ‘அஞ்சனம்’ குறும்படம், அசோக ஹந்தகம- ‘இனி அவன்’, ஈரானியச் சினிமா-நிசப்தம் என்னும் ‘சோக்கவுட்”, பாலஸ்தீனியர் வாழ்வான ‘மிரால்”, ‘The Way Back’ -சுதந்திர வேட்கையுடன் நெடும் பயணம், ‘கில்லீசின் மனைவி’ – பிரெஞ்சு சினிமா, ‘கர்ண மோட்சம்’ – விருதுகள் பெற்ற கூத்துக்கலை பற்றிய குறும்படம், காற்பந்தாட்டம் பற்றி மட்டுமல்லாத திரைப்படம் ‘Buitenspel’, குருட்டுமை ‘Blindness’,  ஒரே இனக் கலாச்சார பிரெஞ்சு சினிமா ‘Sans Maiso’, ‘மிஸ்டர் அன்ட் மிசஸ் ஐயர்’, அஜீவனின் குறும்படங்கள், ‘காஞ்சிவரம்’- நெசவுத் தொழிலாளியின் அவல வாழ்க்கை, ஷோபா சக்தி நடித்த பிரெஞ்சுப் படம் ‘Dheepan’, மம்முட்டி நடித்த ‘உண்ட’ மலையாளப் படம், ‘Snowerpiercer” முக்கிய திரைப்படம், மதர் இந்தியா, நந்தா- கவனத்திற்குரிய திரைப்படம் ஆகிய 20 திரைப்பட கலைஞர்களுக்கான ரசனைக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்