17420 மறக்க முடியாத திரைப் பாடல்களும் பாடலாசிரியர்களும்.

சிலோன் விஜயேந்திரன். சென்னை 600 005: சோனம் பதிப்பகம், 243, வு.ர்.சாலை, ரத்னா கேப் அருகில், திருவல்லிக்கேணி, 2வது பதிப்பு, ஜுன் 2001, 1வது பதிப்பு, டிசம்பர் 1992. (சென்னை 600 005: பேஜ் ஓப்செட், 6/2, தேவராஜா தெரு, திருவல்லிக்கேணி).

viii, (8), 503 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 135., அளவு: 18×12.5 சமீ.

தமிழகத்தின் திரைப்படத்துறையில் 1932 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில் இயங்கிய பாடலாசிரியர்களையும் அவர்களது பாடல்களையும் விரிவாக அறிமுகப்படுத்தும் நூல். தமிழ்த் திரைப்படப் பாடல்களின் இலக்கியத் தகுதியை முதன்முதலாக மிகவும் விரிவாகவும் சுவையாகவும் அடையாளம் காட்டி 1992இல் ‘அறுபதாண்டு காலத் திரைப்பாடல்களும் பாடலாசிரியர்களும்’ என்ற தலைப்பில் ஆசிரியர் எழுதியிருந்த நூல் இப்பொழுது விரிவாக்கப்பட்ட பதிப்பாக ‘மறக்கமுடியாத திரைப்பாடல்களும் பாடலாசிரியர்களும்’ என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க:

இலங்கை சினிமாவில் ருக்மணிதேவியும் எஸ்.எம்.நாயகமும். 17922

ஏனைய பதிவுகள்