வி.இ.குகநாதன். தமிழ்நாடு: மருது பதிப்பகம், ஈரோடு, 1வது பதிப்பு, 2023. (தமிழ்நாடு: அருணா எண்டர்பிரைசஸ், சென்னை).
vi, 7-66 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
‘செஸ்’ எனும் ஆட்டமானது சங்ககாலம் முதலே தமிழரால் ஆடப்பட்டு வந்துள்ளது என்பதை அகழ்வாய்வுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள், இலக்கண நூல் சான்றுகள், சொல்லாடல்கள் போன்ற சான்றுகளைக் காட்டி நிறுவும் ஒரு முயற்சியே இந்நூலாகும். இன்றைய ஊாநளள ஆட்டம் இதே வடிவில் சங்ககாலம் முதல் இருக்கவில்லை. இருப்பினும், ‘வல்லாட்டமே’ இன்றைய ‘செஸ்’ ஆட்டத்தின் மூலம் (Origin) என்பதை இந்நூல் நிறுவ முயல்கின்றது. ‘சதுரங்கம்’ என்ற சொல் தமிழ்ச் சொல்லா?, வல்லாட்டம், சிந்துவெளி நாகரிகத்தில் பலகையாட்டம், எழுதப்பட்ட வரலாறு, சங்க இலக்கியங்களில் வல்லாட்டம், வல்லு என்பது சூதாட்டம்/தாயம் என்ற தவறான கருத்து, வல்லாட்டத்துக்கான அகழ்வாய்வுச் சான்றுகள், ஆடு புலி ஆட்டம், சங்க காலத்தில் காணப்பட்ட நாற்படை, சங்ககால எண்பேராயம் – ஐம்பெருங் குழு, திருத்தி எழுதப்பட வேண்டிய வல்லாட்டத்தின் வரலாறு, வல்லாட்ட அருஞ்சொற்கள், வல்லாட்டத்தில் தமிழரின் நிகழ்கால நிலை, வல்லாட்டம் விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. தமிழியல் ஆய்வாளர் வி.இ.குகநாதன் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவராவார். தற்போது புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வருகின்றார்.