17425 அம்மாவுக்குப் பிடித்த கனி.

ஷெல்லிதாசன் (இயற்பெயர்: பேரம்பலம் கனகரத்தினம்). திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2021. (திருக்கோணமலை: ஏ.ஆர்.டிரேடர்ஸ், 82, திருஞானசம்பந்தர் வீதி).

124 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-6135-07-2.

இடதுசாரி சிந்தனை ஆளுமைகொண்ட முற்போக்குக் கவிஞர் குழுவில் ஒருவரும், ஈழத்து மெல்லிசைப் பாடலாசிரியர்களுள் ஒருவருமான ஷெல்லிதாசனின் சிறுவர்களுக்கான பாடல்களின் தொகுப்பு இது. கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர் வெளியீடான ‘கன்னி’, ‘வணிகமலர்’ ஆகிய இதழ்களின் ஆசிரியராக அறிமுகமாகியவர்.  இந்நூலில் மக்கள் கவி பாரதி, தெய்வம் எங்கள் பாட்டியம்மா, அம்மாவுக்குப் பிடித்த கனி, காற்றில் ஆடும் ரோஜாப்பூ, மாமரத்துக் குயில் பாட்டு, வான் நோக்கி வளரட்டும் வடலிகள், ஒற்றுமைக்கு ஒரு பறவை, நாளை உலகம் நமதாகும் என இன்னோரன்ன 42 இளையோருக்கான பாடல்களை கவிஞர் ஷெல்லிதாசன் வழங்கியுள்ளார். மேலதிகமாக ‘கதை கூறும் இசைப்பாடல்கள்’ என்ற பிரிவில் இசையோடு கலந்த பாடல்களுடனான சிறுவர் கதைகள் இரண்டினையும் ‘குட்டித்தம்பி கோமகனும் குதூகலமான நண்பர்களும்’, ‘அம்மா யானையும் இரு யானைக்குட்டிகளும்’ ஆகிய தலைப்புகளில் இடம்பெறச் செய்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

14979 கொட்டியாரபுரப்பற்று முதுசங்கள்.

அருமைநாதன் ஸதீஸ்குமார். திருக்கோணமலை: வைத்திய கலாநிதி அருமைநாதன் ஸதீஸ்குமார், 48ஃ190 கண்டி வீதி, விநாயகபுரம், 1வது பதிப்பு, 2016. (திருக்கோணமலை: எஸ்.எஸ்.டிஜிட்டல்ஸ் பிரின்ட்ஸ்). ஒஒஎi, 171 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: