17434 மருதம்: சிறுவர் கதைப் பாடல் தொகுப்பு.

நந்தினி ஜென்சன் றொனால்ட். தென்மராட்சி: அன்சன் கலையகம், உசன், 1வது பதிப்பு, டிசம்பர் 2023. (தென்மராட்சி: மாதுளன் பதிப்பகம், உசன் சந்தி, மிருசுவில்).

40 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 500., அளவு: 24.5×17 சமீ., ISBN: 978-624-96582-3-3.

தென்மராட்சிக் கல்வி வலயத்துக்குட்பட்ட யா/விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றும் திருமதி நந்தினி, சிறார்கள் விரும்பிப் பாடக்கூடிய வகையில் கதையும், சந்த அமைப்பும் சேர்ந்து அவர்களைக் கவரக் கூடியதான கதைப்பாடல்களை இங்கு தந்துள்ளார். வலையில் சிக்கிய முயல், தீமை நினைத்தால் தீமையே நேரும், வண்ணக் குருவிகள், மரங்களும் மழையும், சிந்து பார்த்தாள் சந்தை, அம்மா வைத்த அவிசு,  விதி விதிகளை மதிப்போம், பட்டாம்பூச்சி, சிவப்புச் சைக்கிள் வண்டி, தம்பி பள்ளி போகிறான், கனிந்த மனக் கமலன், ஏழையில் இறைவனைக் காணுங்கள், வீரப் புலியும் தந்திர நரியும், கண்ணம்மாவின் கதை, மாடப்புறாக்களும் பூனையும், சாந்தனும் பன்றிக் குட்டிகளும், நானும் முக்கனிகளும், மாலா கற்ற வண்ணங்கள், ஆழி அழகை இரசித்த பவித்திரா, பசுமை உலகு காணுங்கள், வானில் ஏழு வர்ணங்கள் ஆகிய 21 தலைப்புகளில் இக்கதைப்பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Wolf Run Tragamonedas

Content Wolf Run: Enorme Rtp Con manga larga Elevada Tensión Icy Wilds Wild Fury Jackpots ¿qué Funciones Específicas Tiene Una Tragamonedas Sin cargo Wolf Run?