17439 நடிப்போம்: சிறுவர் நாடகங்கள்.

எஸ்.பஞ்சகல்யாணி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, சித்திரை 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

60 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-87-1.

வயலுக்குச் சென்ற எலிகள், வண்ணத்துப் பூச்சிகள் சொல்வதென்ன, வீழ்ந்து போகும் மரங்கள், குயிலின் கூடு, காக்கையாரும் டெங்கும், காவோலை தேடி, பன்றிக்குட்டியும் பாடசாலையும், தவளையும் முயலும், போதை, இயற்கையின் இரசிகர்கள், பறக்கும் கனவு ஆகிய பதினொரு சிறுவர் நாடகங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பஞ்சகல்யாணி, சிறுவர்களுக்கான தனது நான்காவது படைப்பாக்கமாக இந்நூலை வெளியிட்டுள்ளார். இயற்கையை நேசிக்கும் இவர் இயற்கையுடனான தனது ஈடாட்டங்களையும் அனுபவங்களையும் பாடல்கள், கவிதைகள், நாடகங்கள் எனப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்திவருகின்றார். இயற்கையுடன் ஒன்றிய வாழ்வு சிறுவர்களை நன்னடத்தையுள்ளவர்களாக்கும் என இவர் நம்புகின்றார். இந்நூலில் அதனை காணமுடிகின்றது. நடைமுறை வாழ்க்கையில் நாம் எதிர்நோக்குகின்ற பாரிய பிரச்சினையான போதைவஸ்துப் பாவனை பற்றி மிகவும் எளிமையான முறையிலும், மேலோட்டமாகவும், இளையோர் விளங்கிக் கொள்ளும் வகையில் எழுதியுள்ளார்.  இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 266ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

10 Euro Bonus Ohne Einzahlung Im Casino

Content Vulkanbet Bonus Ohne Einzahlung | Casino desert treasure Casino Bonus Ohne Einzahlung Für 2024 Freispiele Im Online Casino: Für Welche Spiele Gelten Die Freespins?

10344 உள் ஒளி: வாலிபர்கட்கும் முதியவர்கட்குமான யோகாசனப் பயிற்சி நெறி.

க. பஞ்சலிங்கம். யாழ்ப்பாணம்: க.பஞ்சலிங்கம், ஓய்வுபெற்ற கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர், 1வது பதிப்பு, ஐப்பசி 2010. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி அச்சகம்). 55+39 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ.