எஸ்.எம்.மிஷால். கல்முனை: எஸ்.எம்.மிஷால், அல் மதினா மகா வித்தியாலயம், நிந்தவூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (கொழும்பு 13: ரெயின்போ பிரின்ட், 231, ஆதிருப்பள்ளித் தெரு).
vi, 84 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 22×14.5 சமீ.
நிந்தவூர் கமுஃஅல்-மதீனா மகா வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி பயிலும் எஸ்.எம்.மிஷால், தனது முதலாவது நூலாக இக்கதைப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்நூலில் மொத்தம் 13 கதைகள் இடம்பெற்றுள்ளன. இவரது கற்பனையில் உதித்த கதைகளும், தழுவல்களும் கதைகளாக இடம்பெற்றுள்ளன. கதை உருவான கதை, உலக்கை பூஜை, தண்டனை யாருக்கு?, மந்திர விளக்கு, தன் வினை தன்னைச் சுடும், பூதத்தை வென்றவன், பாவத்தின் சம்பளம், சோம்பேறி அந்தணன், பேராசை பெருநட்டம், ஓவியத் திருடன், எல்லாம் நூறு, வினைக்கு வினை, தோமஸின் புல்லாங்குழல் ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 93491).