17444 ஆத்திசூடிக் கதைகள் (சிறுவர் கதைகள்).

தேன்மொழி சபா (இயற்பெயர்: திருமதி கனகமணி சபாலிங்கம்). திருக்கோணமலை: திருமதி கனகமணி சபாலிங்கம், 44/12, கிருஷ்ணபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2024. (திருக்கோணமலை: எஸ்.எஸ்.டிஜிட்டல்).

ix, 90 பக்கம், விலை: ரூபா 550., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-95940-7-4.

நவீன இலத்திரனியல் ஊடகங்களுக்குள் மூழ்கிக் கிடக்கும் இளையோரைதட்டி எழுப்பி ‘அறம்’ என்பது யாது? அதன் பயன் சம்பந்தமாகபுரியும்மொழியில் சுவாரஸ்யமாகக் கூறும் நூல் இது. அறஞ்செய விரும்பு, ஆறுவது சினம், ஈவது விலக்கேல், ஊக்கமது கைவிடேல், ஊருடன் கூடிவாழ், ஏற்பதிகழ்ச்சி, பருவத்தே பயிர்செய், கைவினை கரவேல், கெடுப்ப தொழி, கொள்ளை விரும்பேல், நூல்பல கல், நேர்பட வொழுகு, னைவினை நணுகேல், பெரியாரைத் துணைக்கொள், முனைமுகத்து நில்லேல் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 15 ஆத்திசூடிக் கதைகள் இடம்பெற்றுள்ளன. ஆத்திசூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் இயற்றிய நீதி நூலாகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி. தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள், குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப்படுகிற மெக்காலே கல்வி முறை வரை, தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துகளைச் சொல்லித் தருகின்ற நோக்கில் ஒளவையின் ஆத்திசூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள். இந்நூலின் முன்னட்டையில் சிறுவர்களுக்கான ஆத்திசூடிக் கதைகள் -2 என்று காணப்படுகின்றது.

ஏனைய பதிவுகள்