17453 மீனவபுரத்து மீனரசி: சிறுவர் நாவல்.

தாட்சாயணி (இயற்பெயர்: திருமதி பிரேமினி பொன்னம்பலம்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

68 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-39-9.

தங்கக் கட்டிகள் மறைவு, மீனரசியின் சந்திப்பு, இளவரசன் வீரவன், மந்திரவாதியின் பிரவேசம், மீனரசிக்கு காவல், அரசியின் அவலம், அரசியைத் தேடி, தாயும் சேயும், சேடி சொன்ன தகவல், அரக்கியின் சூழ்ச்சி, மேனகை சிரித்தாள், அவளும் புறப்பட்டாள், மூவரும் தப்பினர், சூனியம் பொய்த்தது, தங்கமலை இரகசியம், ஆதித்தனைக் கண்டாள், சிங்கம் பாய்ந்தது, கொம்பு அரக்கன், முனிவரைக் கண்டனர், சூனியக்காரி இறந்தாள், விஷ ஊற்று, சகோதர உறவு, தங்கம் கிடைத்தது, பாட்டனார்கள் வாழ்த்து, திருமணமோ திருமணம் ஆகிய 25 அத்தியாயங்களில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. இது தாட்சாயணியின் பத்தாவது நூல். சிறுகதைகளும் கவிதைகளுமாக எழுதிவந்த இவரது புதிய முயற்சியாக ஒரு சிறுவர் நவீனம் வெளிவந்துள்ளது. சிறுவர்களுக்கான நாவல் இலக்கியத்தில் உள்ள பற்றாக்குறையை இனம்கண்டு தாட்சாயணி இப்படைப்பினை வெளியிட்டுள்ளார். கண்மணி என்னும் சிறுவர் இதழில் இத் தொடர்கதையின் ஆரம்ப அத்தியாயங்கள் வெளிவந்த நிலையில் அச்சஞ்சிகையே நின்று போனது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 309ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

live casino online

Online casino bonus Live casino online Play online casino Live casino online Automatically enroll in the rewards program by signing up with code VIBONUS You’ll