நந்தினி ஜென்சன் றொனால்ட். தென்மராட்சி: அன்சன் கலையகம், உசன், 1வது பதிப்பு, ஆடி 2023. (தென்மராட்சி: சக்தி பதிப்பகம், மீசாலை).
36 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 450., அளவு: 24.5×18 சமீ., ISBN: 978-624-96582-2-6.
கற்பனைச் சிறகுகள் என்னும் மாணவர்களின் சிந்தனைப் புலன்களைத் தூண்டும் இந்நூல் ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைகின்றது. தரம் 4, 5 ஆசிரியர் வழிகாட்டியை அடிப்படையாகக் கொண்ட காட்சிப் படங்களையும், அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட தலைப்புகளையும் உள்ளடக்கிய நூல். இதில் 23 கட்டுரைத் தலைப்புகள், 17 அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிக்குரிய தலைப்புகள், தரம் 4இற்கும் தரம் 5இற்கும் உரிய காட்சிப் படங்கள் என பாடங்கள் வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.