17467 கலையருவி 1998: வன்னிப் பிரதேசச் சிறப்பு மலர்.

 ஏ.ஜே.செரிபுதீன்.(பதிப்பாசிரியர்). கொழும்பு 6:  கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(105) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18 சமீ.

வன்னிப் பிரதேசத்து மாணவர்களின் கல்வி நிலைமைகளை ஊக்குவிக்கும் வகையில் கொழும்புத் தமிழ்ச்சங்கம் அங்குள்ள மாணவர்களின் மத்தியில் மொழித்திறன், நாவன்மை, இசை, நாடகம், கவிதை முதலியனவற்றை 1995இல் நடத்தியது. மொத்தம் 1060 மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றிருந்தனர். அதன் பரிசளிப்பு விழாவினையொட்டி பரிசுபெற்ற ஆக்கங்களை உள்ளடக்கியதாக இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. கடவுள் வாழ்த்தும் தமிழ் வாழ்த்தும், ஆசியுரைகள் (பட்டினசபைத் தலைவர், அரச அதிபர்கள், கல்விப் பணிப்பாளர்கள், தாபனங்கள்), மாவட்டச் சிறப்புக் கட்டுரைகள் (வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி), மாணவர் சிறப்புக் கட்டுரைகள் (எமது பிரதேசம், நமது மொழி, எமது ஊர்கள், விஞ்ஞானத்தின் விளைவுகள், காடுகளும் அவற்றின் பயன்களும், சூழலைப் பாதுகாப்போம், எனக்குப் பறக்கும் ஆற்றல் இருந்தால்), மாணவர் சிறப்புக் கவிதைகள் (வன்னி வளநாடு, யான் வாழும் ஊர், நமது மொழி, காலைப் பொழுது, யான் விரும்பும் புலவர், சங்கே முழங்கு, பறவைகள் பாரீர், எமது சிந்தனைகள்), மாணவர் சிந்தனைகள், வன்னிப் பிரதேச மாணவர்க்காக 1995ஆம் ஆண்டு நடத்திய தமிழ்த் தேர்வுகளின் விதிகளும் ஒழுங்குகளும், பெறுபேறுகள், பரிசில் பெற்ற மாணவர்கள், பரிசில் பெற்ற கல்வி நிலையங்கள், நன்றிகளும் பாராட்டுகளும் ஆகிய பிரிவுகளின் கீழ் இச்சிறப்பு மலரில் ஆக்கங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4659).

ஏனைய பதிவுகள்

Everi Slots

Blogs Arcane Reel In pretty bad shape Secret Ports 100 percent free Fruits Twist Allfreechips Affiliate users As to why Make a merchant account having