க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, வைகாசி 2022. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
40 பக்கம், சித்திரங்கள், ஒளிப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 29.5×21.5 சமீ.
‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 172ஆவது இதழாக 01.05.2023இல் வெளியிடப்பட்டுள்ள கூத்துக் கலைஞரும் இலக்கியவாதியுமான சீமான் பத்திநாதன் பர்ணாந்து அவர்களின் பணிநயப்புச் சிறப்பிதழில், கலைஞர் பத்திநாதன் பர்ணாந்து அவர்களின் வாழ்வும் வரலாறும் படைப்புகளும்: ஒரு வெட்டுமுகப் பார்வை (அருட்திரு தமிழ்நேசன் அடிகளார்), சீமான் பத்திநாதன் அவர்களின் நாவல்கள்-ஓர் அசைபோடும் அலசல் (துறையூரான்), குஞ்சரமூர்ந்தோர்: ஒரு மிகச் சிறந்த நாவல் மட்டுமல்ல மக்களது வாழ்வியலின் பண்பாட்டு ஆவணமும் கூட (எஸ்.கே.விக்னேஸ்வரன்), மக்களை எழுதிய கலைஞன் பத்திநாதன் பர்ணாந்து (சூசைதாசன்), சீமான் பத்திநாதன் எழுதி வெளியிட்ட 64 டிசம்பர் 22 (பத்திநாதன்), எண்பதுகளின் இனப்போர் பின்னணியில் மன்னார் பிரதேச கடலோர மக்களின் அகப்புற வாழ்வியல் தரிசனமாய் விரியும் திசையாப் பயணங்கள் நாவல் குறித்த ஒரு பார்வை (புலோலியூர் வேல் நந்தகுமார்), வாழ்க்கையெனும் கூத்தினை எழுதிய கதை: சீமான் பத்திநாதன் பர்ணாந்துவின் ‘கூத்துப் படிச்ச கதை’ (த.அஜந்தகுமார்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகளும் சீமான் பத்திநாதன் பர்ணாந்து அவர்கள் எழுதிய சிறுகதை, கவிதை என்பனவும் அவருடன் ஜீவநதி ஆசிரியர் க.பரணிதரன் மேற்கொண்ட நேர்காணலும் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 172ஆவது நூலாக வெளிவந்துள்ளது.