17472 ஜீவநதி: தை 2023: ஈழத்து அரசியல் நாவல்கள் சிறப்பிதழ்-1.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

40 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 29×20.5 சமீ.

‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 190ஆவது இதழாக 20.01.2023இல் வெளிவந்த ஈழத்து அரசியல் நாவல்கள் சிறப்பிதழின் முதலாம் பாகத்தில் பதினொரு  நாவல்கள் பற்றிய விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன. இன முரண்பாட்டின் ஆதி ஆவணம் ‘லங்காராணி’ (இ.சு.முரளிதரன்), மு.தளையசிங்கத்தின் ‘ஒரு தனி வீடு’ புனைவுப் பிரதியின் அரசியல் பற்றிய ஒரு விமர்சனம் (ஈழக்கவி), இனக்கலவரமும் இலக்கியமும்-தெளிவத்தை ஜோசப்பின் ‘நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983’ (எம்.எம்.ஜெயசீலன்), ‘இனிப்படமாட்டேன்’ தன்வரலாறு இணைந்த அரசியல் நாவல் (அ.யேசுராசா), வாழிடத்தைக் காக்கும் வெஞ்சினம் கொண்ட குருவி (அருண்மொழிவர்மன்), ‘புதியதோர் உலகம்” உள்ளும் புறமும் (சுவிஸ் ரவி), சயந்தனின் ‘ஆறாவடு’ ஒரு பார்வை (சு.குணேஸ்வரன்), மெய்யுணர்(த்)தல்: ‘அப்பால் ஒரு நிலம்’ புனைவு மீதான வாசிப்பு (தி.செல்வமனோகரன்), புலி ஒவ்வாமையில் பிறந்த நொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ நாவல் (இன்பமகன்), ஆழப் புதைந்த சேறும் அகல மறுக்கும் நினைவடுக்குகளும்- ‘உம்மத்’ நாவலை முன்வைத்து (சி.ரமேஷ்), ‘புள்ளிகள் கரைந்த பொழுது’: போரின் வழித்தடங்கள் (ந.குகபரன்) ஆகிய கட்டுரை ஆக்கங்களை இவ்விதழில் காணமுடிகின்றது.

ஏனைய பதிவுகள்

Какой-никакие лотереи чаще всего выигрывают во Нашей родины? Честные лотереи, в которых вещественно выиграть

Content Играйте на аутентичных лотерейных веб-сайтах Способна ли любой влететь в копеечку счастливым владельцем главного приза, забавая в лотерею? Барыш большого количества денег не обозначает,