க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
32 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 29×20.5 சமீ.
‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 193ஆவது இதழாக 20.02.2023இல் வெளிவந்த 2022இல் மறைந்த இலக்கிய ஆளுமைகள் சிறப்பிதழில், மயிலங்கூடலூர் பி.நடராசன் (ம.பா.மகாலிங்கசிவம்), தெளிவத்தை ஜோசப்பின் படைப்புலகம் (க.இலக்கியா), ஈழத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கி ஒலித்த குரல் தெணியான் (க.பரணீதரன்), நகைச்சுவை எழுத்தாளர் பொ.சண்முகநாதன் (வ.ந.கிரிதரன்), நமக்குத் தொழில் எழுதுதல் என்று திறனாய்வெழுதிக் குவித்த கே.எஸ்.சிவகுமாரன் (ஈழக்கவி), கந்தரோடை தந்த காலத்தால் அழியா இலக்கியச் சிற்பி சு.துரைசிங்கம் (சி.ரமேஷ்), பல்கலைக் கலைஞர் ‘மாஸ்டர்’ சிவலிங்கம் (வ.ந.கிரிதரன்), இளமையிலேயே புலமையாளராய் வாழ்ந்து மறைந்த லெனின் (ஜீவா சதாசிவம்), தமிழ்ப் புலமையாளர் கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் (அர்ச்சுனன்), கோமகன் என இலக்கிய உலகில் அறியப்பட்ட தியாகராஜா இராஜராஜன் (க.பரணீதரன்) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.