க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
36 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 29×20.5 சமீ.
‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 192ஆவது இதழாக 10.02.2023இல் வெளிவந்த எஸ்.எல்.எம்.ஹனீபா சிறப்பிதழில், எஸ்.எல்.எம்.ஹனீபா இலக்கியமும் தனி மனிதப் பண்பாடும் (திக்குவல்லை கமால்), எஸ்.எல்.எம்.ஹனீபா ஒரு மூத்த படைப்பாளியுடன் ஓர் இளவலின் இலக்கியப் பயணம் (ஜிஃப்ரி ஹாசன்), எஸ்.எல்.எம்.ஹனீபா இலங்கையின் வைக்கம் பஷீர் (சாளை பஷீர்), ஹனீபா என்னும் மகோத்துவன் (வடகோவை வரதராஜன்), முடிவிலி மனிதநேயப் பிரதி ‘மக்கத்துச் சால்வை’ (இ.சு.முரளிதரன்), மக்கத்துச் சால்வை (எஸ்.எல்.எம்.ஹனீபா), எஸ்.எல்.எம்.ஹனீஃபா பற்றி வாசித்தவையும் அறிந்தவையும் (கெக்கிறாவ ஸ{லைஹா), திசைகள் (எஸ்.எல்.எம்.ஹனீபா), மனோரதியமும் யதார்த்தமும் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் சிறுகதைகள் (எம்.ஏ.நுஃமான்), எஸ்.எல்.எம்.ஹனீபாவின் மக்கத்துச்சால்வை, அவளும் ஒரு பாற்கடல் தொகுதிகளை முன்வைத்து (அம்ரிதா ஏயெம்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. எஸ்.எல்.எம்.ஹனீபா வாழைச்சேனை மீராவோடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கால்நடை அபிவிருத்தி போதனாசிரியராகப் பணியாற்றியவர். தனது இளமைக்காலத்தில் தடகள விளையாட்டு வீரராகத் திகழ்ந்த இவர், வட கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராகவும் பணியாற்றியவர். மக்கத்துச் சால்வை (1992), அவளும் ஒரு பாற்கடல் (2007), என்டெ சீவியத்திலிருந்து (2023), தீரா நினைவுகள் (2023) ஆகிய நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்.