க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
36 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 29×20 சமீ.
‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 195ஆவது இதழாக 10.03.2023இல் வெளிவந்த மு.சிவலிங்கம் சிறப்பிதழில், மு.சிவலிங்கத்தின் சிறுகதைகளில் தொழிற்சங்க அரசியல் (எம்.எம்.ஜெயசீலன்), மலையக நாவல் வரலாற்றில் மு.சிவலிங்கத்தின் நாவல்கள் (செ.யோகராசா), சமூக நீதியைக் கோரி நிற்கும் கதைகள்: மு.சிவலிங்கத்தின் ‘ஒரு விதை நெல்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து (மு.அநாதரட்சகன்), கேட்டிருப்பாயோ காற்றே-சிறுகதை (மு.சிவலிங்கம்), வியர்வையும் கண்ணீரும் செந்நீரும் கலந்த தேநீர்: ‘ஒப்பாரிக் கோச்சி’ (இ.சு.முரளிதரன்), மலையக மூத்த படைப்பாளி மு.சிவலிங்கத்தின் ‘வெந்து தணிந்தது‘ சிறுகதைத் தொகுப்பு குறித்த ஒரு பார்வை (புலோலியூர் வேல் நந்தகுமார்), நேர்காணல்- மு.சிவலிங்கம் (க.பரணீதரன்), தோட்டத்து உழைப்பாளிகளின் துன்பியல் வாழ்வின் வெளிப்பாடாய் ‘சி.வி.யின் தேயிலை தேசம்” (ஜெயப்பிரசாந்தி ஜெயபாலன்), மு.சிவலிங்கத்தின் படைப்புகள் (சு.தவச்செல்வன்), ஒப்பாரி கோச்சி –சிறுகதை (மு.சிவலிங்கம்), தமிழகத்தில் வாழும் மலையக அகதிகளுக்கு இலங்கை குடியுரிமை வழங்குதல் பற்றி பாராளுமன்ற அங்கத்தினருக்கு எழுதப்பட்ட மு.சிவலிங்கத்தின் பகிரங்கக் கடிதம் ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.