17483 ஜீவநதி: ஆடி 2023: தமிழ்க்கவி சிறப்பிதழ்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

36 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 29×20 சமீ.

‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 207ஆவது இதழாக 10.07.2023இல் வெளிவந்த தமிழ்க்கவி சிறப்பிதழில், தமிழ்க்கவியின் ‘இருள் இனி விலகும்’ நாவல் ம(ை)றக்கப்பட்ட பெண்ணிய வரலாற்றின் முக்கிய அத்தியாயங்கள் (கந்தர்மடம் அ.அஜந்தன்), ‘இனி ஒருபோதும்’ சுழலில் சிக்கிய வாழ்வு (தாட்சாயணி), மூலம்- சிறுகதை (தமிழ்க் கவி), சோகம்-கவிதை (தமிழ்க்கவி), நேர்காணல்- தமிழ்க்கவி (க.பரணீதரன்), தமிழ்க்கவியின் சிறுகதைத் தொகுதி ‘நரையன்’ (ப.தயாளன்), சும்மாயிரு-சிறுகதை (தமிழ்க்கவி), தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’ (வ.ந.கிரிதரன்), ‘இனி வானம் வெளிச்சிரும்’ தமிழ்க்கவியின் எழுத்தின் மீதான ஒரு வாசிப்பு (தி.செல்வமனோகரன்), தமிழ்க்கவியின் நாவல்கள் (தருமராசா அஜந்தகுமார்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. தமயந்தி என்னும் இயற்பெயர் கொண்ட தமிழ்க்கவி, வவுனியாவில் உள்ள சின்னப்புதுக்குளத்தில் பிறந்தவர். ஈழப் போராட்டத்தில் தன்னிரு பிள்ளைகளும் இணைந்ததும், அப்போராட்டத்தில் தானும் இணைந்து செயற்பட்டவர். பெண்களின் பிரச்சினைகள், கிராமப்புறப் பெண்கள் அனுபவிக்கும் அடக்குமுறைகள், போராட்டகாலப் பிரச்சினைகள்,  தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்கள், இறுதிக்கட்டப் போர் என்பவற்றை இவரது எழுத்துக்களின் வாயிலாக நாம் தரிசிக்கலாம்.

ஏனைய பதிவுகள்