க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
32 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 29×20.5 சமீ.
‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 217ஆவது இதழாக 20.10.2023இல் வெளிவந்த ஈழத்து அரசியல் நாவல்கள் சிறப்பிதழின் மூன்றாம் பாகத்தில் ஒன்பது நாவல்கள் பற்றிய விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன. செ.கணேசலிங்கனின் ‘அயலவர்கள்’ மீதான பார்வை (கந்தையா பத்மானந்தன்), சாந்தனின் ‘ஒட்டுமா’ சிங்கள-தமிழ் உறவுகளை நாசூக்காக ஆராயும் ஒரு சொற்சித்திரமா? (ஈழக்கவி), அருவிக்கோட்டு வடிவத்தில் அவலங்களின் குவிவு ‘குருதிமலை’ (இ.சு.முரளிதரன்), செங்கை ஆழியானின் ‘மரணங்கள் மலிந்த பூமி” நாவலை முன்வைத்து (நீலாவணை இந்திரா), எஸ்.ஏ.உதயனின் ‘UP (உத்தரப் பிரதேசம்) 83’ என்ற நாவல் ஈழ விடுதலைப் போரில் இந்தியாவின் பாசாங்கான பங்களிப்பிற்கு ஒரு பெரும் ஆதாரம் (கந்தர்மடம் அ.அஜந்தன்), கவித்துவ மொழியில் வீரத்தையும் காதலையும் பேசும் தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ (திருக்கோணமலை முரளிதரன்), உணர்வெழுச்சிக் காலமொன்றை நினைவில் மீட்டுதல் (தாட்சாயணி), தியாவின் ‘எறிகணை’ நாவல் வாசிப்பனுபவம் (குலசிங்கம் வசீகரன்), உயிர்த்தெழுதல்: அரசரத்தினத்தின் ‘சாம்பல் பறவைகள்” (தி.செல்வமனோகரன்) ஆகிய படைப்பாக்கங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.