17492 ஜீவநதி: கார்த்திகை 2023: நெடுந்தீவு மகேஷ் சிறப்பிதழ்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, கார்த்திகை 2023. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

32 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 29×21 சமீ.

‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 219ஆவது இதழாக 10.11.2023இல் வெளிவந்த நெடுந்தீவு மகேஷ் சிறப்பிதழில், நெடுந்தீவு மகேஷ்-பல்துறை ஆளுமையாளர் (வல்வை ந.அனந்தராஜ்), நெடுந்தீவு மகேஷின் ‘மனிதத்தைத் தேடி’ (இ.சு.முரளிதரன்), விடைகாணாக் கேள்விகளோடு வாழும் ஒரு சமூகத்தின் உணர்வுப் படிமங்களாய் நெடுந்தீவு மகேஷின் ’வாழ்வதற்குப் போராடு’ சிறுகதைத் தொகுப்பு (கந்தர்மடம் அ.அஜந்தன்), நேர்காணல் -நெடுந்தீவு மகேஷ் (க.பரணீதரன்), ஓர் உயிரின் ஓலம்- சிறுகதை (நெடுந்தீவு மகேஷ்), கவிதைகள்: எண்ணம் கொடிது செயல் வலிது, உயிர்த்தெழுவர், பாதைகள் மாறி (நெடுந்தீவு மகேஷ்), என்றும் தொலையாதன் வாழ்வின் வாழ்விடத்தின் பழகிய மனிதர்களின் நினைவுகளைப் பேசும் நெடுந்தீவு மகேஷின் ‘தொலையாத நினைவுகள்’ குறித்த ஒரு பார்வை (புலோலியூர் வேல் நந்தகுமார்), ‘தாரணி ஓர் ஆச்சரியக்குறி’ சிறுகதைத் தொகுப்பு ஓர் அறிமுகக் குறிப்பு (சுந்தரம் டிவகலாலா) ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட படைப்பாக்கங்கள் இங்கு பதிவாகியுள்ளன. செல்லத்தம்பி மகேசு (புனைபெயர்: நெடுந்தீவு மகேஷ்) நெடுந்தீவு கிழக்கு 11ஆம் வட்டாரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஓய்வுபெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளரான இவரது இலக்கியத்துறை நுழைவு 60களின் ஆரம்பத்தில் ‘ஈழநாடு’ பத்திரிகையில் கவிதைகளுடன் தொடங்கியது. 1969இல் தினபதியில் இவரது முதலாவது சிறுகதை ‘ஊமை’ என்ற பெயரில் வெளிவந்தது. இடதுசாரிச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட இவர், வர்க்கப்போராட்டம் சாதி ஒழிப்பு சார்ந்த கவிதைகளை ஆரம்பகாலத்தில் எழுதிவந்தார். இவரது ‘மனிதத்தைத் தேடி’  கவிதைத் தொகுப்பு 2003இல் மாகாண இலக்கிய விருது பெற்றது. மூன்று சிறுகதைத் தொகுதிகளை இவர் தாரணி ஒரு ஆச்சர்யக்குறி, வாழ்வதற்குப் போராடு, நான் பிறவாதிருந்திருந்தால் ஆகிய தலைப்புகளில் வழங்கியுள்ளார். சுடர் ஒளி வார இதழ்களில் இவர் எழுதிய பத்தி எழுத்துக்களின் தொகுப்பாக ‘தொலையா நினைவுகள்’ என்ற நூலைவெளியிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

17591 விடாய் (கவிதைகள்).

தில்லை. யாழ்ப்பாணம்: தாயதி வெளியீடு, சமூக செயலூக்கத்துக்கான முன்னோடி, 1வது பதிப்பு, ஜனவரி 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை). 88 பக்கம், விலை: இந்திய ரூபா 90.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-9501-161-2.

Penny Slots

Content Enjoy Zeus Position By the Wms: 5 Reels And you will 15 Paylines Provides 100 percent free Canadian Harbors No Down load Should i

Vegetation Casino slot games

Do this utilizing the environmentally friendly keys near to lines in the the fresh kept of your own monitor. Mode win contours can also be