17496 ஜீவநதி: தை 2025: ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறுகதைச் சிறப்பிதழ்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜனவரி 2025. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

164 பக்கம், சித்திரங்கள், ஒளிப்படங்கள், விலை: ரூபா 1000., அளவு: 29×20.5 சமீ.

‘ஜீவநதி’ கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 250ஆவது இதழாக 02.01.2025இல் வெளியிடப்பட்டுள்ள சிறுகதைச் சிறப்பிதழில் மலரன்னை, தாமரைச் செல்வி, யோகேஸ்வரி சிவப்பிரகாசம், மண்டூர் அசோகா, கோகிலா மகேந்திரன், தமழ்க்கவி, ஆதிலட்சுமி சிவகுமார், தமிழ்நதி, தாட்சாயணி, ராணி சீதரன், எம்.ஏ.ரஹீமா, இராஜினிதேவி சிவலிங்கம், மண்டைதீவு கலைச்செல்வி, நெலோமி, சாந்தி நேசக்கரம், விமல் பரம், வசந்தி தயாபரன், கௌசி, ஸ்ரீலேக்கா பேரின்பகுமார், சியாமிளா யோகேஸ்வரன், வெலிகம ரிம்ஸா முஹம்மத், தியத்தலாவ எச். எப்.ரிஸ்னா, கோபிகை, பிரபா அன்பு, கீதா கணேஷ், மிதயா கானவி, ஜலீலா முஸம்மில், சம்மாந்துறை மஷூரா, மதிவதனி (சுவிஸ்), பிறேமினி அற்புதராசா, ஸ்ரீரஞ்சனி, த.மைதிலி, புனிதா கணேஷ், ரஞ்ஜனி சுப்பிரமணியம், பூங்கோதை, பிரமிளா பிரதீபன், லதா உதயன், பாலசுப்பிரமணியம் சிவாந்தினி, சாரங்கா (குணாளினி தயானந்தன்), குமுதினி கலையழகன், நிம்மி சிவா, பவானி சற்குணசெல்வம், ப.விஷ்ணுவர்த்தினி, ரஜீதா அரிச்சந்திரன் ஆகிய 44 ஈழத்துப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்