17501 அமைதிப் பூக்கள்.

மூதூர் எம்.எம்.ஏ.அனஸ். மூதூர் 5: மட்டக்களப்பு வீதி, பெரியபாலம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (திருக்கோணமலை: ஜெஸ்கொம் பிரிண்டர்ஸ், இல. 230, உட்துறைமுக வீதி).

(4), 62 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 240., அளவு: 21.5ஒ14.5 சமீ.

‘அமைதிப் பூக்கள்’ என்ற கவிதையில் தொடங்கி, ‘இப்போது இங்கு’ என்ற கவிதை ஈறாக கவிஞர் அனஸின் 46 கவிதைகள் இத்தொகுதியில் இடம்பிடித்துள்ளன. மூதூர் எம்.எம்.ஏ.அனஸ், 20 நூல்களுக்கு மேல் எழுதியவர். எட்டுக்கும் அதிகமான அவரது காவிய நூல்களும் இன்றளவில் வெளிவந்துள்ளன. ‘அமைதிப் பூக்கள்’ கவிதைத் தொகுதி அவரது முதலாவது நூலாக 2013இல் வெளிவந்திருந்தது. அவரது ஆரம்பகாலக் கவிதைகளின் தொகுப்பாக இது அமைகின்றது. மூதூர் எம்.எம்.ஏ.அனஸ், திருக்கோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளராகவும், அக்கட்சியின் அரசியல் உயர்பீட உறுப்பினராகவும், செயற்குழுச் செயலாளராகவும் பணியாற்றியவர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 113539).

ஏனைய பதிவுகள்