17503 அரவம் புணர்ந்த அடவி (கவிதைகள்).

கோ.நாதன். பிரான்ஸ்: நடு வெளியீடு, 03, Allee La Boetie, 93270 Sevran, 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).

128 பக்கம், விலை: இந்திய ரூபா 135., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-5692-00-2.

கிழக்கிலங்கையின் பொத்துவிலில் பிறந்தவர் கே.ாநாதன். பிரான்சுக்கு புலம்பெயர்ந்த பின்னர் பாரிஸ் நகரில் வசித்து வருகிறார். தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைச் செயற்பாடுகளில் ஈடுபடும் இவர் தமிழின் தீவிர இதழ்களிலும் இணையத்தளங்களிலும் இயங்கி வருபவர். ஊடகத்துறைக்கான பட்டயக் கற்கை நெறியினை கொழும்பு பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்தவர். இவர் 2015இல் ‘வேரின் நிழல்’, 2016இல் ‘இரத்தவாசி’ ஆகிய இரு கவிதைத் தொகுதிகளை ஏற்கெனவே வெளியிட்டுள்ளார். இத்தொகுப்பில் இவரது அறுபது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. பழக்கப்பட்ட சூழலுக்கும் மனதில் வடிவமைக்கப்பட்ட உணர்ச்சி சார்ந்த நினைவுகளுக்கும், புலம்பெயர்ந்து சென்ற பழக்கமற்ற சூழலுக்கும், அங்கே உணர்ச்சி சார்ந்து எதிர்கொள்ளும் வேறுபாடுகளுக்குமிடையிலான சவால்களையும், நெருக்கடிகளையும் மன அலைச்சலின் வழியே எதிர்கொள்ள முயற்சிக்கின்றன கோ.நாதனின் கவிதைகள். நூலின் இறுதியில் றியாஸ் குரானா எழுதிய ‘நிலவியலின் வழியே துயரங்களாக உருமாறும் சொற்களற்ற உரையாடல்’ என்ற திறனாய்வுக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

Oriental Prosperity Slot Beizebu

Content Slots Grátis: Onde Os Casinos Online Sentar-se Distinguem: Fortune Circus giros livres de slot Alternatives To Slots Prosperity Ready To Play West Journey Treasure

17972 கேகாலை மரபுரிமைகளைப் பார்வையிடுவோம்.

அலெக்சாண்டர் கப்புகொட்டுவ (சிங்கள மூலம்), ஜனரஞ்சனி தனபாலன் (தமிழாக்கம்). கொழும்பு: வெளியீட்டுப் பிரிவு, மத்திய கலாசார நிதியம், உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 7: மத்திய