17506 அன்பின் முத்தங்கள்.

வி.மைக்கல் கொலின். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி). 

100 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 19×13 சமீ., ISBN: 978-624-5849-24-6.

கவிஞர் வி.மைக்கல் கொலினின் எட்டாவது நூலாகவும், ஆறாவது கவிதைத் தொகுதியாகவும் வெளிவரும் இந்நூல், மகுடம் வெளியீட்டகத்தின் 86ஆவது நூலாகும். கவிஞர் மைக்கல் கொலினின் அன்பின் முத்தங்கள் கவிதைத் தொகுதியில் உள்ள பல கவிதைகள் வேதநூல்களில் இருந்தும், தொன்மங்களில் இருந்தும் மறுவாசிப்பு உத்தியில் இயற்றப்பட்டுள்ளன. இதில் உள்ள அரசியல் கவிதைகள் எமது நாட்டின் நிஜத்தை சொல்கிறது. இதில் முள்ளி வாய்க்காலும் உள்ளது, நாட்டின் அரசியலை புரட்டிப்போட்ட அரகலய போராட்டமும் உள்ளது. அன்பின் முத்தங்கள், காதல் முத்தங்கள், துரோகத்தின் முத்தங்கள், அரசியல் முத்தங்கள், வலிகளின் முத்தங்கள், போராட்டத்தின் முத்தங்கள் என பல தரப்பட்ட முத்தங்களை அவரது கவிதைகளில் காணலாம். குறியீட்டு உத்தியிலும் சில கவிதைகளைப் படைத்துள்ளார்.

ஏனைய பதிவுகள்