17513 இரை தேடும் பறவைகள்.

மந்தாகினி குமரேஷ். சென்னை 600093: வேரல் புக்ஸ் வெளியீடு, 6, 2ஆவது தளம், காவேரி தெரு, சாலிகிராமம், முதற் பதிப்பு, ஜனவரி 2024. (சென்னை 600093: வேரல் புக்ஸ்).

95 பக்கம், விலை: கனேடியன் டொலர் 12.99, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-966624-5-5.

இத்தொகுப்பிலுள்ள மந்தாகினியின் கவிதைகளில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் பார்வையில் புலம்பெயர்தலின் வலியையும் புதிய ‘பனித் திணை’ யின் நிலத்தில் ஒட்டிக்கொள்ளவோ, இரண்டறக் கலந்துவிடவோ முடியாத அந்தரிப்பினை காணமுடிகின்றது. தாயகத்தை எண்ணி வெறுமனே நினைந்து உருகிக்கொண்டிராமல் தாய்நிலம் மீதான நினைவுகளை ஆழமான புரிதலுடன் தன் கவிதைகளில் இக்கவிஞர் வெளிப்படுத்தமுனைந்துள்ளார். தான் ஈழப் போராட்டப் பரப்பிலிருந்து புலம்பெயர நேர்ந்த நிலைமை குறித்தும் இவர் சில கவிதைகளைத் தந்துள்ளார். அதற்கு தாயகத்தில் ஈழப்போராட்டத்துடன் ஐக்கியப்பட்டிருந்த அவரது குடும்பப் பின்புல அனுபவம் கைகொடுத்துள்ளது. ஈழப் போரின் எதிர்பாராத முடிவு அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி நாட்டை விட்டு வெளியேறச் செய்து புலம்பெயர வைத்தது. களத்தில் அடிபட்டுச் சேதங்களோடும் வலிகளோடும் குடும்பத்தோடு கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்களில் மந்தாகினியும் ஒருவரானார். புதியதொரு பரிச்சயமற்ற பிரதேசத்தில் நிலைகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்ட சூழலில் அவர்கள் இணங்கியே தீரவேண்டிய நிலைமையின்- அந்தப் புதிய வாழ்க்கையின் பிரதிபலிப்பே இதிலுள்ள கவிதைகள் எனக் கருதலாம்.

ஏனைய பதிவுகள்

16513 கலைந்த தேனீக்கள்: கவிதைத் தொகுப்பு.

சு.வரதன் (இயற்பெயர்: சுப்பிரமணியம் வரதகுமார்). வவுனியா: தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, மார்ச் 2009. (வவுனியா: ஒன்லைன் அச்சகம்). xvi, 84 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 200., அளவு: 17.5×11.5 சமீ. சு.வரதகுமார்