ஒளவை (இயற்பெயர்: சுவர்ணா கௌரிபாலா). லண்டன்: திருமதி சுவர்ணா கௌரிபாலா, 1வது பதிப்பு, 2023. (கொடிகாமம்: சிவகஜன் அச்சகம்).
xii, 112 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-94840-1-6.
ஒளவையின் ‘உண்மையைத் தேடி’ என்ற இக்கவிதைத் தொகுப்பில் கவிஞரின் உள்ளத்தில் உருவாகிய சிந்தனைச் சிதறல்களைக் கவிதைகளாக வெளிப்படுத்தியுள்ளார். கவிதைக்கான பொருண்மையையும் உணர்வு நிலையையும் வாசகர் நிலையில் நின்று நோக்கும்போது அவை வாசிக்கும் வேகத்தைத் தூண்டிவிடுகின்றன. இறை வணக்கம் தொடங்கி, கழுதை ஈறாக 108 தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.