17517 உதயப் பொழுதும் அந்தி மாலையும்: தேர்ந்த கவிதைகள்.

எம்.ஏ.நுஃமான். ஐக்கிய இராச்சியம்: சமூகம் இயல் பதிப்பகம், 317, பெருந் தெரு வடக்கு, ஈஸ்ட்ஹாம், லண்டன்,

1வது பதிப்பு, டிசம்பர் 2023. (சென்னை 600077: மணி ஓப்செட்).

(8), 456 பக்கம், விலை: இந்திய ரூபா 600., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-81-962275-6-2.

1944இல் கிழக்கிலங்கை கல்முனையில் பிறந்த எம்.ஏ.நுஃமான், உலக அரங்கில் நன்கறியப் பெற்றதொரு மொழியியலாளரும் கவிஞரும் இலக்கிய விமர்சகருமாவார். தனது வாழ்வின் காலத்தை ஐந்து பிரிவுகளாக வகுத்து, ‘உதயம்’ என்ற முதலாவது பிரிவில் 1962-1964 காலகட்டத்தில் தான் எழுதிய 30 கவிதைகளையும், ‘முற்பகல்’ என்ற இரண்டாவது பிரிவில் 1965-1969 வரையிலான காலகட்டத்தில் எழுதிய 50 கவிதைகளையும், ‘நண்பகல்’ என்ற மூன்றாவது பிரிவில் 1970-1979 காலகட்டத்தில் எழுதிய 20 கவிதைகளையும், ‘பிற்பகல்’ என்ற நான்காவது பிரிவில் 1980-1999 காலகட்டத்தில் எழுதிய 34 கவிதைகளையும், ‘அந்திமாலை’ என்ற  ஐந்தாவது பிரிவில் தான் 2000-2022 காலகட்டத்தில் எழுதிய 22 கவிதைகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். படிமுறையில் வளர்ச்சியுற்ற நுஃமானின் கவிப்புலமையை ஒழுங்குமுறையில் தரிசிக்க இத்தொகுப்பு வழிவகுத்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72581).

ஏனைய பதிவுகள்

Österreich

Content besten Verbunden Casinos für jedes Handy Bezüge Sic einfach funktioniert‘s beim ersten Mal: 🤨 Wafer alternativen Zahlungsoptionen existiert es in Angeschlossen Casinos? Spielautomaten in

Online Blackjack Routine The Game

Content Must i Enjoy Black-jack to your a cellular phone? | use the weblink Web based casinos give a lot more differences of blackjack, many