17524 என்ர அப்பு என்ர அம்மா: கவிதைகள்.

சோ.தேவராஜா. மல்லாகம்: கலாலயம் பதிப்பகம், 68, புத்தகப் பண்பாட்டுப் பேரவை, நீதிமன்ற வீதி, 1வது பதிப்பு, கார்த்திகை 2023. (பண்டத்தரிப்பு: ஜே.எஸ்.அச்சகம், சில்லாலை வீதி).

vi, 42 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-93177-3-4.

கவிஞர் சோ.தேவராஜா 1995 முதல் எழுதிய தனிக் கவிதைகளும் ஏழு பாடல்களும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. முன்னதாக இவர் 2001இல் வெளியிட்ட ‘ஆச்சி’ என்ற தொகுப்பில் 1970இற்குப் பின்னர் எழுதிய தனிக் கவிதைகளும், சில கவியரங்கக் கவிதைகளும் இடம்பெற்றிருந்தன. இவரது கவிதைகள் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தாயகம், புதிய பூமி, புது வசந்தம் ஆகிய சஞ்சிகைகளில் செண்பகன், ஈழத்துத் தேவன் பூதனார் ஆகிய புனைபெயர்களில் எழுதப்பட்டிருந்தன. இத்தொகுப்பில், பூமி சூரியனாய், வெற்றி நமதே, தெளிவே தெய்வம், நேரமில்லை எனும் வரம் வேண்டும், பிள்ளை யார், அம்மா, உச்சி மீது, தாங்குமோ இத்தரணி, அப்பு, சிரி லங்கா, இழப்பு, மரங்களின் கனி-சங்கர், மறப்பாவும் மறதிப்பாவும், நானும் பொம்மை நீயும் பொம்மை, உலகப்பாவும் அரசியல் பாவும், வாழ்வின் சாரம், என்.ஜி.ஓப் பெம்மானே, வோட்டும் வீடும், கரங்கள் உயரும், ஆளுமை, விழிப்பே எங்கள் உலகு, மறுபடி, அம்மா-2, பூமாதேவியே தாயே, ஒழுங்கு, விண்ணில் பறப்போம், எழுந்து வா, வாழ்வதே எம் கனவு, மனிசர் எங்கே, பூவே பூவிழந்தாயோ, விடுதலை ஏன் ஆகிய 31 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்