சாரங்கா (இயற்பெயர்: திருமதி குணாளினி தயாநந்தன்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
116 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-58-1.
1990களில் பொது வெளியில் எழுத ஆரம்பித்த சாரங்கா ‘ஏன் பெண்ணென்று’ என்ற ஞானம் விருது பெற்ற சிறுகதைத் தொகுதியை 2004இல் வெளியிட்டிருந்தார். மீண்டும் தனது கவிதைத் தொகுதியுடன் தமிழ் இலக்கிய உறவுகளைச் சந்திக்கிறார். இக்கவிதைத் தொகுதியில் உள்ள 37 கவிதைகளும் பெண்ணியம், அரசியல், மொழி, தாய்மண், இருப்பு, புலம், சமூகச் சீர்கேடுகள் எனப் பலவற்றையும் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 239ஆவது நூலாக வெளிவந்துள்ளது.