யசோதா சோதிப்பிரகாசம். கொழும்பு 6: திருமதி யசோதா சோதிப்பிரகாசம், 51-2/2, 33வது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xvi, 121 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-99087-0-3.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் சிறப்புப் பட்டத்தை பெற்ற கலைத்துறைப் பட்டதாரியான திருமதி யசோதா சோதிப்பிரகாசம், ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். கவிதை என்னும் அற்புத இலக்கிய வடிவம் அவரவர் வாழ்ந்த காலச்சுவட்டைப் பிரதிபலிக்கும் என்ற வகையில் இவரது உள்ளத்து உணர்வுகள் இங்கு எழுத்துருப் பெற்றுள்ளன. ஒரு காலகட்டத்து யாழ்ப்பாணச் சூழலில் மகிழ்ந்திருந்த அந்த உணர்வுகள் மற்றும் தான் நேசித்த பாடசாலை ஆசிரியர் சேவை போன்றவற்றை இக்கவிஞர் தனது கவிதைகளின் பேசுபொருளாக்கியுள்ளார்.