17537 காயப்படும் பூமி: கவிதைகள்.

அலெக்ஸ் பரந்தாமன் (இயற்பெயர்: இராசு தங்கவேல்). மானாமதுரை 630606: வளரி எழுத்துக் கூடம், 32, கீழத்தேர் வீதி, சிவகங்கை மாவட்டம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை).

102 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.

யாழ்ப்பாணத்தில் பிறந்து வன்னிப் பிரதேசத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு என்னும் இடத்தில் வசிக்கும் அலெக்ஸ் பரந்தாமன் எண்பதுகளின் பிற்பகுதியில் ‘உள்ளம்’ என்னும் கலை இலக்கிய மாத இதழில் ‘ஒரு பிடி அரிசி’ என்னும் சிறுகதையின் வாயிலாக இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். ஈழத்தின் போர்க்கால வாழ்வு, இடப்பெயர்வு, உறவுகளின் உயிர் இழப்பு என்று எல்லா நெருக்கடிகளையும் அனுபவித்த இவரது எழுத்துகளின் யதார்த்தமும் வேதனைகளும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவையே. ‘அலெக்ஸ் பரந்தாமனின் கவிதைகள் வாழ்வின் துயரங்களை, துரோகங்களை, ஏமாற்றங்களை, வலிகளைத் தீக்கனிகளாகச் சிதறவிடுகின்றன. ஈழப் பெருந்துயரில் வாழ்விடப் பிரச்சினையே வாழ்க்கைப் பிரச்சினையாக மாறிப்போன பேரவலத்தை வெவ்வேறு  தளங்களில், ஆதரவற்ற பெண்மையின் மீதான தரிசனமாக, ஆழ்மனச் சிக்கலுக்குள் துளிர்க்கும் நம்பிக்கை இன்மையாக, உழைப்பின் மதிப்பைத் தொலைத்தவரின் தேடலாக, பூமியின் காயங்களுக்குத் தீர்வைத் தேடும் மருத்துவமாகவும் இன்னும் பலவாகவும் இவரது கவிதைகளில் வெளிப்படுகின்றன.’ (கவிஞர் மு.செல்வா, பின்னட்டைக் குறிப்பு).

ஏனைய பதிவுகள்