பொலிகை ஜெயா (இயற்பெயர்: பன்னிருகரம் ஜெயக்கொடி). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆவணி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
72 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-04-1.
பொலிகை ஜெயாவின் கவிதைகள் இழந்துவிட்ட புகலிடத் தமிழரின் தாயக வாழ்வின் ஏக்கங்களையும் நாடு கடந்த வாழ்க்கையில் ஏற்படும் முரண்நிலைகளையும் பல்வேறு உணர்வுகளோடு பதிவுசெய்கின்றன. ‘என் தெய்வங்கள்’ என்ற கவிதையில் தொடங்கி ‘அப்பா அப்பா’ என்ற கவிதை ஈறாக 34 கவிதைகளை இத்தொகுப்பில் கவிஞர் இடம்பெறச் செய்துள்ளார். வடபுலத்தில் பொலிகண்டியை பிறப்பிடமாகக் கொண்ட பொலிகை ஜெயா பின்னாளில் புலம்பெயர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகின்றார். ‘பறிகொடுத்த பின்பும் வாழத் துடிப்பவர்கள்’ என்ற சிறுகதைத் தொகுதியையும், ‘எங்கே போகிறது எம் தேசம்’ என்ற கவிதைத் தொகுதியையும் தொடர்ந்து பொலிகை ஜெயாவின் மூன்றாவது நூலாக இக்கவிதைத் தொகுதி ஜீவநதி வெளியீட்டகத்தின் 381ஆவது நூலாக வெளியிடப்பட்டுள்ளது.