17540 கிடுகு வீடு: கவிதைகள்.

நீலையூர் சுதா (இயற்பெயர்: சிவபாதசுந்தரம் சுதாகரன்). மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி). 

xii, 148 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-5849-31-4.

கிழக்கிலங்கையிலிருந்து எழும் இக்கவிஞரின் முதலாவது கவிதைத் தொகுப்பு இது. எமது கிராமிய பாரம்பரியங்கள், வழமைகள், விழுமியங்கள், வழக்காறுகள், கலாசாரங்கள் படிப்படியாக மருவி இல்லாதொழிந்து போகும் இன்றைய நிலையில் தானறிந்த தான் நுகர்ந்த கிழக்கிலங்கையின் மண்வாசனையை அதன் கீர்த்தியை பலரும் உணர்ந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலின் உந்துதலால் இக்கவிதைகள் பிரசவிக்கப்பட்டுள்ளதாக இக்கவிஞர் குறிப்பிடுகிறார். இக்கவிதைகளில் சமூகத்தில் காணப்படும் பல்வேறுபட்ட அவலங்கள், பிரச்சினைகள், ஏழ்மை, வர்க்க வேறுபாடுகள், கிராமத்திற்கேயுரிய சிறப்பம்சங்கள் என அனைத்து விடயங்களையும் இக்கவிதைகள் தொட்டுச் செல்கின்றன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 113420).

ஏனைய பதிவுகள்

15151 புதிய சமூகக் கல்வி பயிற்சிகள் (வினா-விடைகள்) தரம் 10.

கமலா குணராசா (மூலம்), க.குணராசா (மீள்பார்வை). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, 234 காங்கேசன்துறை வீதி, வெளியிட்ட ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி). 64 பக்கம், வரைபடங்கள்,