17542 குருதிச்சாரல்.

சிவலோகதாசன் சதுர். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

60 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-59-7.

‘சிவலோகநாதன் சதுரினுடைய இக்கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளை வாசிக்கும் போது அவரிடம் ஒரு நல்ல கவிஞனுக்குரிய பல பண்புகள் இயல்பாகவே இருப்பதனைப் புரிந்துகொள்ளலாம். தன்னைச் சுற்றி நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து உள்வாங்கி, கிரகித்துப் பின் தான் கற்றதும் பெற்றதுமான அனுபவங்களுடன் அவற்றைப் பொருத்திப் பார்த்து தனது உணர்வுகளையும்; கருத்துக்களையும் இணைத்துக் கவிதையாக்குகின்ற பாங்கினை சதுரிடம் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. சில இடங்களில் இளைய கவிஞனாகிய சதுரிடம் விஞ்சிக் காணப்படும் இந்தப் பாங்கு சில முதிர் கவிஞர்களிடம் இல்லாதிருப்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்” (காரைக்கவி கந்தையா பத்மானந்தன் – அணிந்துரையில்). இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 338ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்