எம்.ஏ.நுஃமான். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 2வது பதிப்பு, ஜ{லை 2023, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (சென்னை 600005: Adyar Students Xerox Pvt Ltd, 275, ஹபீபுள்ளா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி).
70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-5523-278-6.
ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியரான எம்.ஏ.நுஃமான், உலக அரங்கில் நன்கறியப் பெற்றதொரு மொழியியலாளரும் கவிஞரும் இலக்கிய விமர்சகருமாவார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். இலங்கையில் யாழ்ப்பாணம், பேராதனைப் பல்கலைக்கழகங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். போருக்கும் வன்முறைக்கும் எதிரான தனது கவிதைகளைத் தேர்ந்து இத்தொகுப்பில் தந்துள்ளார். துப்பாக்கி அரக்கரும் மனிதனின் விதியும், நேற்றைய மாலையும் இன்றைய காலையும், புத்தரின் படுகொலை, மனிதன், வரலாற்றுக் குருடர், காத்திருப்பு, மனிதனின் அடையாளம், கடவுள், அடிமை, ஜூலை நினைவுகள், பதிலீடு, குப்பை வண்டி, துப்பாக்கிக்கு மூளை இல்லை, இனந்தெரியாத நபர், என் கடைசி வார்த்தைகள், சிறுவனின் தோளில் துப்பாக்கி, துப்பாக்கி பற்றிய கனவு, பிணமலைப் பிரசங்கம், உனது போர், வெண்புறாவின் வருகைக்காகக் காத்திருந்தபோது, பயங்கரக் கனவு, அவர்களும் நீயும், இருபது ஆண்டுகள்: நினைவில் ஒழுகும் குருதி, நான் விரும்பியவை, நீ தூக்கிய துப்பாக்கி, ராணுவ வீரனின் குழந்தை, மரித்தோரின் ஆன்மா, நந்திக் கடல் அருகே, இனி எப்போது?, இனி புதிதாக ஆகிய தலைப்புகளில் இக்கவிதைகள் அவ்வப்போது எழுதிப் பிரசுரமானவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72589).