சோ.தேவராஜா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், இணை வெளியீடு, மல்லாகம்: கலாலயம் பதிப்பகம், 68, புத்தகப் பண்பாட்டுப் பேரவை, நீதிமன்ற வீதி, 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
60 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-23-8.
உலகப்பாவும் அரசியல்பாவும் அல்லது விக்கிரமசிங்ஹ நமஹ, உச்சி மீது, மௌனம் ஆகிய மூன்று கவியரங்கக் கவிதைகள் உள்ளிட்ட 29 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மலையக மக்களின் 200 வருட நெஞ்சுருக்கும் வாழ்வை எண்ணி எழுதிய முதலிரு கவிதைகளும் முன்னர் தாயகம், வளரி ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்தவை. மானிட வாழ்வின் துயரங்களும் நெருக்கடிகளும் நெஞ்சைப் பிழிவன. அவற்றின் அவலங்களையும் சில கவிதைகளாக்கியுள்ளார். தமிழ் குறுந்தேசியத்தின் கையாலாகாத் தனத்தையும் அவர்களின் வியாபார அரசியலையும் சியோனிச இஸ்ரேலின் உறவையும் பற்றிச் சில கவிதைகள் பேசுகின்றன. சமகாலத்தில் இடம்பெற்றுவரும் இஸ்ரேலின் காஸா மீதான யுத்தத்தையும் அதன் கொடுமை அநீதிகளையும் கண்டு கொதிக்கும் மனோநிலையில் சில கவிதைகள் உண்டு. வட்டுக்கோட்டைப் பொலிசாரினால் சட்டவிரோதமாகக் கொலை செய்யப்பட்ட நாகராசா அலெக்சின் நினைவாக எழுதப்பட்ட கவிதையும் இடம்பெற்றுள்ளது. இக்கவிதைகள் தாயகம், புது வசந்தம், ஜீவநதி, கலைமுகம், வளரி ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்திருந்தன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 305ஆவது நூலாகவும் கலாலயம் பதிப்பகத்தின் 13ஆவது நூலாகவும் வெளிவந்துள்ளது.