ஆதன் குணா (இயற்பெயர்: ந.குணசிவரூபன்). மட்டக்களப்பு: ந.குணசிவரூபன், புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, 2025. (மட்டக்களப்பு: காந்தள் அச்சகம், புதுக்குடியிருப்பு).
104 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 19.5×12 சமீ., ISBN: 978-624-94438-0-8.
இத்தொகுப்பில்; 93 தலைப்புகளில் எழுதப்பட்ட ஆதன் குணாவின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பின் பாவற்கொடிச்சேனை என்ற விவசாயக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த இக்கவிஞரின் முதற் கவிதை தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றுக்கொண்ட பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தின் வெளியீடான ‘பாகல்துளிர்’ மலரில் 2019இல் முதன்முதலில் இடம்பெற்றது. இவர் தனது இடைநிலைக் கல்வியை சிவானந்தா தேசிய பாடசாலையில் பெற்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியிருந்தார். பாடசாலைக் காலத்தில் இருந்து அவ்வப்போது எழுதிவந்த சிறு கவிதைகளைத் தொகுத்து இந்நூலை தனது முதலாவது நூலாக ஆதன் குணா வெளியிட்டுள்ளார்.