நிந்தகத்து பாரிஸ். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
xvi, 68 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-17-8.
‘வாழ்க்கையின் தத்துவங்களை, மனதின் உணர்வுகளை, காதல் நினைவுகளை, தோல்வியின் வலிகளை, துரோகத்தின் துயரங்களை, துன்பத்தின் இழைகளை, அன்பின் அரவணைப்புகளை, பாசத்தின் நேசங்களை, பழக்கத்தின் சந்தோஷங்களை, மனதில் பட்டது பட்டபடி படிப்பவர் நெஞ்சை தொட்டது தொட்டபடி தேர்ந்தெடுத்த சுருக்கமான சொற்களால் மெருகேற்றி கவிதைகளாய் வடித்தெடுத்து அவற்றை வாசக நெஞ்சங்களில் அணிவகுக்க வைக்கும் அற்புதக் கவிதைகளாய் தன் கற்பனை ஊற்றை வெள்ளமெனப் பொங்கிப் பிரவகிக்க வைத்துள்ளார்.’ பாயிஸா நௌபல் (பின்னட்டைக் குறிப்பு). இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 203ஆவது நூலாக வெளிவந்துள்ளது.