காசி ஆனந்தன். கொழும்பு 2: குங்குமம் வெளியீடு, 31/21 டோசன் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1972. (கொழும்பு 2: அருள் ஒளி அச்சகம்).
12 பக்கம், விலை: 25 சதம், அளவு: 18×12.5 சமீ.
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் பேரின்ப விடுதலைப் பாடல்கள் இச்சிறு நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன. தsளு தமிழ் இறைவா, முருகையா கொஞ்சம் உருகையா, முல்லை நிலத்து முகில் வண்ணன், அணைத்தாண்ட அழகன், இறைவன் எண்ணம் எதுவோ?, தேடி வருவேன், உன்னை மறப்பதில்லை, ஒரு முகம் பார்ப்பானா?, வடிவேலன் இன்னும் வரவில்லை, கந்தன் எங்கள் தந்தை ஆகிய பத்து பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.