சூரியநிலா (இயற்பெயர்: ஆ.ஜென்சன் றொனால்ட்). தென்மராட்சி: அன்சன் கலையகம், உசன், மிருசுவில், 1வது பதிப்பு, 2016. (தென்மராட்சி: மாதுளன் பதிப்பகம், உசன் சந்தி, மிருசுவில்).
iv, (4), 48 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.
கவிஞர் சூரியநிலா தனது உள்ளத்து உணர்வுகளை பலருக்கும் விளக்கும் வகையில் இயற்கை அழகு குலையாமல் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழைக் கையாண்டு இந்நாட்டார் பாடல்களை உருவாக்கியுள்ளார். போரோடு போராடிய யாழ் மண்ணின் குருதி தோய்ந்த நினைவுகளையும் வேரோடு விழுந்துவிட்ட தன் அன்னையின் துயரவாடையையும், அரசியல் சாக்கடையில் அழுகிக் கொண்டிருக்கும் மக்கள் வாழ்வையும், தமது வாழ்வைத் தாமே அழித்துக் கொண்டிருக்கும் சுயவிழிப்புணர்வற்ற சமுதாயத்தையும் தன் கவிப் பொருட்களாகக் கொண்டதோடு மனதோடு ஊறிப்போன காதலையும் இணைத்து யாழ் கவியை படைத்துள்ளார். இயந்திரமயமான இன்றைய உலகில் தென்னந்தோப்பு பசுங்கிளிகளும், குளிரோடையும், தழுவி அணைக்கும் தென்றலைச் சுகிக்கும் இயற்கை இன்பத்தையும் இவரது கவிதைகளில் காணலாம்.