17588 வருக பொற்காலம்: உலகத் தமிழ்க் கவிதை தேர்வுத் தொகுப்பு நூல்.

 க.இ.க.கந்தசாமி (பதிப்பாசிரியர்). கொழும்பு 6:  கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1995. (வத்தளை: வத்தளை அச்சகம், 17/10, நீர்கொழும்பு வீதி).

x, 63 + (10) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற கவிதைகளினதும் கவிதைப் போட்டி தொடர்பான பிற தகவல்களினதும் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. பதிப்புரை (க.இ.க.கந்தசாமி), வாழ்த்துரை (செ.குணரத்தினம்) ஆகியவற்றைத் தொடர்ந்து, உலகத் தமிழ்க் கவிதைத் தேர்வில் முதன்மைப் பரிசில்கள் பெற்ற கவிஞர்கள், திறமைச் சான்றிதழ் பெற்ற கவிஞர்கள், பாராட்டுச் சான்றிதழ் பெற்ற கவிஞர்கள், முதன்மைப் பரிசில் நிதிகளும் அவற்றை வழங்கியவர்களும், பரிசில் பெற்ற கவிதைகளில் முதற் பரிசில் பெற்ற கவிதை (சோம.சிவப்பிரகாசம், கீழ் சீவல்பட்டி, தமிழகம்), இரண்டாம் பரிசில் பெற்ற கவிதை (கபிலவாணன், சென்னை), மூன்றாம் பரிசில் பெற்ற கவிதை (முருகதாசன், பாண்டிச்சேரி), திறமைச் சான்றிதழ் பெற்ற கவிதைகள் (மெய்யாண்டவன் – காரைக்குடி, ம.விக்ரர்-யாழ்ப்பாணம், ஏ.ஸீ.இஸ்மெய்ல் லெப்பை- மட்டக்களப்பு, தமிழப்பன்- சென்னை, க.த.ஞானப்பிரகாசம்-யாழ்ப்பாணம்), பாராட்டுச் சான்றிதழ் பெற்ற கவிதைகள் (வி.இக்குவனம்- சிங்கப்பூர், சிவா சின்னத்தம்பி- கனடா),  பாராட்டுச் சான்றிதழ் பெற்ற கவிதைகள் (வி.இக்குவனம்-சிங்கப்பூர், சிவா சின்னத்தம்பி-கனடா), பரிசில்கள், திறமைச் சான்றிதழ்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் பெற்ற கவிஞர்கள் பற்றிய குறிப்புகள் ஆகிய விடயங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 85298).

ஏனைய பதிவுகள்

Oceanbets Comment

Posts Betspino Casino App Sea Bets Gambling establishment Speel Tegen Andere Spelers En Win Grote Prijzen Within the Het Casino The new local casino is