வி.அபிவர்ணா. முல்லைத்தீவு: விநாயகமூர்த்தி அபிவர்ணா, மூங்கிலாறு வடக்கு, உடையார்கட்டு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2023. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).
xx, 100 பக்கம், விலை: ரூபா 1200., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-98430-1-1.
கவிஞர் அபிவர்ணா, ஒரு கவிஞராக மாத்திரமன்றி எழுத்தாளராக, நாடகக் கலைஞராக, பத்திரிகையாளராக, பாடலாசிரியராக, ஓவியராக எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டு தன்னை அடையாளம் காட்டிநிற்பவர். அபிவர்ணாவின் மூன்றாவது நூல் இதுவாகும். முன்னைய இரு நூல்களும் இவரது பள்ளிக் காலத்தில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இத்தொகுதியில் உள்ள கவிதைகளில் அதிகமானவை சமூகநலன் சார்ந்தவையாகவே காணப்படுகின்றன. இதில் 80 கவிதைகள் அடங்கியுள்ளன.