சிவ.ஆரூரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
40 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17×12.5 சமீ., ISBN: 978-624-5881-60-4.
‘சிவ.ஆரூரன் தொடர்ச்சியாக ஜீவநதி சிற்றிதழில் ஹைக்கூ கவிதைகளை எழுதி வருகின்றார். அண்மைக் காலத்தில் அதிக கவனக் குவிப்புக்குள்ளான படைப்பாளி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் சிறைக்கம்பிகளுக்கு மறுபுறத்திலிருந்து கனதியான ஆக்கங்களைத் தந்தவண்ணம் உள்ளார். இவரது நாவல், சிறுகதை என்பவற்றின் நீட்சியாக ஹைக்கூ கவிதைகள் தொகுப்பாக்கம் பெறுவது பெருமகிழ்வினைத் தருகின்றது. விடுகதை விடைப்பாங்கும் வெளிப்படைத் தன்மையும் சில கவிதைகளில் தலைதூக்கி நிற்பதைத் தவிர்த்திருக்கலாம். ஈழத்தில் இதுவரை வெளியான ஹைக்கூ கவிதைகளோடு ஒப்புநோக்கும்போது எந்த வகையிலும் குறைவற்ற கவிதைகளாகவே இவை அமைந்துள்ளன. மாறுபட்ட அதிர்வினை வாசகனிடத்தே ஏற்படுத்தும் வல்லமைமிக்க இக்கவிதைகள் அலாதியான அனுபவத் தொற்றலை நிகழ்த்தும் கனதியோடு காணப்படுகின்றன’ (இ.சு.முரளிதரன்). இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 240ஆவது நூலாக வெளிவந்துள்ளது.