அஷ்ரபா நூர்தீன்;. மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2024. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).
xxviii, 100 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-624-5849-57-4.
இது மகுடம் வெளியீட்டகத்தின் 88ஆவது நூலாக வெளிவந்துள்ளது. இதில் திருக்கோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாலையூற்று அஷ்ரபா நூர்தீன் இயற்றிய 73 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அஷ்ரபாவின் கவிதைகள் ஒளிவு மறைவற்றவை. சில்லறை நோக்கங்களுக்கு அப்பாற்பட்டவை. தன் மனதில் பிரவகிக்கும் கவிதைகளை எந்தக் கட்டுப்பாடுகளுக்குள்ளும் அகப்படாது பதிவுசெய்து விடுகிறார். இவர் 1980களில் ‘தினபதி-சிந்தாமணி’ வார சஞ்சிகையில் மரபுக் கவிதைகளையும், தினகரன் வாரமஞ்சரியின் ‘கவிதைச் சோலை’ பகுதியில் புதுக்கவிதைகளையும் எழுதிப் புகழ்பெற்றவர். ‘அல்லி” என்ற பெயரில் ஒரு சிறுசஞ்சிகையையும் கையெழுத்துச் சஞ்சிகையாக வெளியிட்டு வந்தவர். இவரது கவிதைகளிற் சில சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு ‘ஆகக் குறைந்த பட்சம்’ என்ற தலைப்பில் 2012இல் வெளிவந்திருந்தது. பன்னிரு ஆண்டுகளின் பின்னர் இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது.
மேலும் பார்க்க:
செபரத்தின வெண்பா. 17936
பாவேந்தல் பாடல்கள்: 17406
புதுவை இரத்தினதுரை கவிதைகள்: 18யு5
மறக்க முடியாத திரைப் பாடல்களும் பாடலாசிரியர்களும். 17420
ஜீவநதி: மார்கழி 2023: இடர்காலக் கவிதைகள் சிறப்பிதழ். 17493