சர்வதேச மன்னிப்புச் சபை. London WC1X 0DW: Amnesty International, Peter Benenson House, 1, Easton Street, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 10: Fast Printery Pvt Limited,165, தேவநம்பியதிஸ்ஸ மாவத்தை).
(22), 23-170 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-0-86210-495-5.
சர்வதேச மன்னிப்புச் சபையினரால் இலங்கையிலும் அதற்கு வெளியில் உலகளாவிய இலங்கையர்கள் பலரால் ‘மொனமாக்கப்பட்ட நிழல்கள்” கவிதைப் போட்டிக்கு வரையப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. மும்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கவிதைத் தொகுதி, இலங்கையின் காணாமல்போகச் செய்தல் சார்ந்த சோகக் கவிதைகளின் தொகுப்பு. இத்திட்டம் பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்பட்ட சம்பவங்கள் காரணமாக ஏற்பட்ட தேசிய நெருக்கடிக்கான எதிர்வினைகள் மற்றும் பிரதிபலிப்புகளை பகிர்ந்துகொள்வதற்காக கட்டியமைக்கப்பட்ட ஒரு ஆக்கபூர்வமான வெளியாகும். இலங்கையின் மிக முக்கியமான ஒரு பிரச்சினையின் மீது மக்கள் கவனத்தை அதிகமாக ஈர்ப்பதில் இக்கவிதைகள் வெற்றியடைந்துள்ளன. காத்துக் கொண்டிருக்கிறேன் (ஜயனி அபேசேகர), அவர் விரைவில் வருவார் (மாலதி டீ அல்விஸ்), அவர்கள் எதுவுமே செய்யவில்லை (மன்னார் அமுதன்), என் குழந்தையை தேடிக் கொண்டிருக்கிறேன் (கேஷாயினி எட்மென்), நீங்கள் திரும்பி வரவேண்டும் ஏன் என்றால் நாங்கள் காத்திருக்கிறோம் (ரஹீமா வயிசால்), இராஜாவை எதிர்பார்த்துக் கொண்டிருத்தல் (பெசில் பர்ணாந்து), சட்டகமாக்கப்பட்ட வாழ்வுகள் (தனுஷ்க கீர்த்திரத்ன), காணாமல்போன விடுதலை விரும்பி (நொரன் யசிஸ் லால்), நான் காணாமல் போனவன் (லலித் மானகே), இன்னும் காத்துக்கொண்டிருக்கிறேன் (ரியா றமீஸ்), பட்டியல் தேடும் முற்றுப்புள்ளி (புன்யா சமரக்கோன்), அவன் பொருட்டு விருந்துணணக் காத்தே கிடக்கிறேன் (தீபன் சிவபாலன்), ஆர்ப்பரிக்கும் நினைவலைகள் (தயா தேவி), முதுமைக் கோலம் (ஷஷ் ட்ரெவட்- ShashTrevett), தனித்த பயணம் (ஹசித்த விக்கிரமசிங்க) ஆகிய கவிதைகள் மும்மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.